காதலர் தின சிறப்பு வெளியீடாக ‘ஹிப்ஹாப்’ ஆதியின் ‘பொய் பொய் பொய்’ ஆல்பம் பாடல்!

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். அவரது உருவாக்கத்தில் காதலர் தின சிறப்பு வெளியீடாக ‘பொய் பொய் பொய்’ என்ற  சுயாதீன ஆல்பம் பாடல் காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது. இது முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட ராப் வகை பாடல்.

காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின்  துரோகம், வலி, ஏமாற்றம்  என  காதலின் துயரத்தை அழுத்தமான வரிகளில் பேசுகிறது இந்த பாடல்.  துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது.ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி  வருகிறார். ‘பொய் பொய் பொய்’ பாடலை தொடர்ந்து மாதம் ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போகிறார்களாம்.

23

Leave a Reply

Your email address will not be published.