திரைப்பட இயக்குநர், கவிஞர் ராசி.அழகப்பன் எழுதிய ஆங்கிலக் கவிதை நூல் வெளியீடு! புதுச்சேரியில் நடந்த விழாவில் பிரபல இலக்கியவாதிகள் பங்கேற்பு!

கவிஞரும், திரைப்பட இயக்குநருமான ராசி.அழகப்பன் தமிழக அரசு விருது பெற்றவர். அவரது MOISTURE OF MOTHERLAND (‘தாய்மண்ணின் ஈரம்’) என்ற ஆங்கிலக் கவிதை நூல் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார்.

விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகர் வழங்க,பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார்.

பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி, கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார். பாவலர் குமாரவேறு நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது!

20

Leave a Reply

Your email address will not be published.