‘ரவாளி’ படத்துக்காக தமிழ் கற்று டப்பிங் பேசிய வடமாநில ஹீரோ!

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ்ப் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல் இயக்க, சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் ‘ரவாளி.’
தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்தி மொழி பேசும் வடமாநில இளைஞனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடிப்போய் திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனைத் தேடுவதுதான் கதைக்களம்!

இந்த படத்தில் ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைப்படி, கதாநாயகன் தமிழ் நாட்டில் வாழும் வட மாநில இளைஞன் என்பதால், வட மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவரை கதாநாயகனாக்கிய, இயக்குனர் ரவி ராகுல் அவருக்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்து, அவரையே படத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா 25.9. 2022 அன்று மாலை சென்னையில் நடந்தது. இயக்குனர் கஸ்தூரி ராஜா பாடல்களை வெளியிட்டார்.
நிகழ்வில் இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த், கதாநாயகி ஷா நைரா, கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் சுஜாதா, ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், அப்புக்குட்டி, விஜயமுரளி, பிஆர்ஓ. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படக்குழு:-
கதை, திரைக்கதை இயக்கம் – ரவி ராகுல்
ஒளிப்பதிவு – வினோத் குமார்
இசை – ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன்
எடிட்டிங் – வளர் பாண்டியன்
பாடல்கள் – இளைய கம்பன், கு.கார்த்திக்
நடனம் – சந்திரிகா
சண்டைக் காட்சி – ஹரி முருகன்
மக்கள் – தொடர்பு கோவிந்தராஜ்