கலை நிகழ்ச்சிகள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை – பாராட்டுச் சான்றிதழ்… உற்சாகமாய் நடந்த தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்!

நாட்டின் 75-வது சுதந்திர தினம் தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் (South Indian Press Club) கொண்டாடப்பட்டது.

தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து அடையாறில் உள்ள தனியார் பள்ளியின் கலையரங்கத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாநில இணைச் செயலாளர் பேராசிரியர் ராஜா

நிகழ்வில், சிறப்பாக பணிபுரிந்த செய்தியாளர்களை வாழ்த்தி மன்றத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மன்றத்தில் புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அடையாள வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

பத்திரிகையாளர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு ராஜன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நமது பழங்கால மருத்துவ முறைகளை உயிர்ப்பிக்கும் நோக்கில் மருத்துவ ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் மாநில பொது செயலாளர் நடராஜன், மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராஜா, துணை தலைவர்கள் சுந்தர், ஷங்கர், பாலமுருகன், மாநில துணை செயலாளர்கள் வேல்முருகன், சுவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp