‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்.’ படப்பிடிப்பு விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான ‘ஜெயம்’ ரவி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘சைரன்.’

ஹோம் மூவி மேக்கர்ஸ் (Home Movie Makers) சார்பில் சுஜாதா விஜயகுமார் மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படத்தை தயாரிக்கிறார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களை, வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத புது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்கிறார். அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித்துணுக்கு இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படக்குழு:-

எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ்

தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார் இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன் பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S ஒப்பனை: மாரியப்பன் ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
விளம்பர வடிவமைப்பாளர்: யுவராஜ் கணேசன் வண்ணம்: பிரசாத் சோமசேகர்
DI: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

Leave a Reply

Your email address will not be published.