சத்யபாமா பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மற்றும் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கத்துடன் இணைந்து இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் சார்பில் உலக மனித உரிமைகள் தினவிழா அனுசரிப்பு!

செம்மஞ்சேரி: சத்யபாமா தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் சட்ட
கல்லூரி மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இந்திய சமுக நல அமைப்புடன் இணைந்து மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திலுள்ள முனைவர் ரெமிபாய் ஜே.பி.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முனைவர் ம.ஜெய் சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு
தலைமை உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட இந்திய சமுக நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் மற்றும் பாச்பன் பாச்சா அந்தோலன் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் மாலிம் எச்.நத்தர்ஷா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்வின் தொடக்கத்தில் முன்னாள் நீதியரசர் ம.ஜெய்சந்திரன் மற்றும் சத்யபாமா பல்கலைகழகத்தின் டீன் முனைவர் தில்ஷாத் ஷைக் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சத்யபாமா கல்லூரி சட்ட துறையின் மனித கடத்தல் எதிர்ப்பு தலைவர் மற்றும் துணை தலைவர் வரவேற்புரை ஆற்றினர்.
அதனை தொடர்ந்து முன்னாள் நீதியரசர் ம.ஜெய்சந்திரன் அவர்கள் மனித உரிமைகள் மற்றும் அதனை பற்றிய சட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு தலைமை உரை வழங்கினர்.மேலும் இந்நிகழ்வில் ஏ.ஜே..ஹரிஹரன் அவர்கள் மனித உரிமையில் மாணவர்களின் பங்கு குறித்தும், மாலிம் எச்.நத்தர்ஷா அவர்கள் மனித கடத்தல் பற்றி யும் சிறப்புரை ஆற்றினர்.
நிறைவாக சத்யபாமா பல்கலைகழக சட்ட துறையின் உதவி பேராசிரியர் பூஜா ஸ்ரீ அவர்கள் நன்றியுரை நல்கினார்.