வரும் ஞாயிறு காலை 9 மணிக்கு, சென்னை சவேரா ஹோட்டலிலிருந்து (Thryve Digital Brailles on Wheels) ‘பார்வையற்றோருக்கான கார் பேரணி.’

பார்வையற்றோருக்கான தேசிய சங்கம் (NAB) மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) இணைந்து நடத்திய ‘பார்வையற்றோருக்கான கார் பேரணி’ 32வது நிகழ்வு இப்போது ‘திரைவ் டிஜிட்டல் பிரெய்ல்ஸ் ஆன் வீல்ஸ்’ (Thryve Digital Brailles on Wheels) என்ற பெயரில் வரும் பிப்ரவரி 26; 2023 அன்று காலை 9 மணிக்கு சென்னை சவேரா ஹோட்டல் வளாகத்திலிருந்து தொடங்கவிருக்கிறது.

ஒவ்வொரு காரிலும் கண்பார்வை திறனற்றவருடன், பார்வை திறனுள்ள நபர் வழிகாட்டியாக இருப்பார். அவர் பார்வை திறனற்ற ஓட்டுநருக்கு பிரெய்லி வரைபடத்தின் உதவியுடன் முறையான வழிமுறைகளை கொடுத்து பேரணிக்காண பாதையில் வழி நடத்திச்செல்வார். பங்கேற்பாளர்கள் தங்களின் செயல்முறையை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள பிப்ரவரி 25-ம் தேதி மாலை 4 மணியளவில் சோதனை பேரணி நடத்தப்படும்.

For further information: 97109 47355 / 9841079163

Title Sponsor : Thryve Digital Health
Organizer : Madras Motor Sports Club for National Association for the Blind
Co Sponsors : O2 Health Studio & Savera
Radio Partner : Suryan FM
Gift Sponsors : Duchess Club & Constel Charitable Trust

இதற்கான அறிவிப்பை வெளியிடுகிற நிகழ்வில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலசுப்ரமணியன் சங்கரநாராயணன், (தலைவர் & CEO, Thryve Digital Health) ”சிறந்த எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இத்தனித்துவமான பேரணியின் பங்குதாரராக இருக்கும் வாய்ப்பிற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏற்றதாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவாதே எங்களின் முதன்மையான நோக்கம். தவிர, திரைவ் டிஜிட்டல் பிரெய்ல்ஸ் ஆன் வீல்ஸ்’ எங்களின் முதல் வருட நிகழ்வு என்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்” என்றார்.

பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் தலைவர் நீனா ரெட்டி, ” ‘திரைவ் டிஜிட்டல்’ பேரணியை தொகுத்து வழங்குபவர்கள் மட்டும் அல்ல; அதற்குகும் மேலாக கருத்தப்படுவர்கள். பேரணிக்கு மறுபெயரிட்டு உதவியது மட்டுமல்லாமல் நிகழ்வை மேலே கொண்டு செல்ல சிறப்பான குறிப்புகளை ஆதரித்தனர். இப்பேரணி, இரண்டு வருட அமைதிக்குப் பிறகு, உண்மையிலேயே சிறந்த காரணத்தை நோக்கி நாம் ஒருங்கிணைவதால், மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இதன் மூலம் உணர்வுள்ள குடிமக்களின் சமூகத்தை உருவாக்குவோம்” என்றார்.

 

21

Leave a Reply

Your email address will not be published.