தமிழ்நாடு உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்கள் சங்கத்தின் லோகோ வெளியீட்டு விழா! விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பங்கேற்பு!

தமிழ்நாடு உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்கள் சங்கத்தின் லோகோ (FIT Tamilnadu Logo) வெளியீட்டு விழா 18.12. 2022 அன்று சென்னை கோயம்பேட்டில் நடந்தது.

நிகழ்வில் விருகம்பாக்கம் தொகுதி ‌சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நடன‌ மற்றும் திரைப்பட இயக்குநர் பாபா பாஸ்கர் கலந்துகொண்டு லோகோவை அறிமுகப்படுத்தினர்!அமைப்பின் மாநில தலைவர் ராஜேஷ் பெருமாள், மாநிலச் செயலாளர் பஹத் ஜஹாங்கிர், மாநிலப் பொருளாளர் சரவணன், மாநில துணைத் தலைவர் விஜயராகவன், மாநில இணைச் செயலாளர் யுவராஜ், மாநில ஆலோசகர்கள் பால் மணி, ஜெயகுமார் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp