ஜெயா தொலைக்காட்சியின் ‘காலை மலர்’ இப்போது புதிய பகுதிகளுடன்!

ஜெயா தொலைக்காட்சியில் ‘காலை மலர்’ இப்போது புத்தம் புதிய வடிவில் புத்தம் புது பகுதிகளுடன் தினமும்  காலை 7 மணியிலிருந்து 9.00 மணி வரை உங்களை மகிழ்விக்க வருகிறது.

இந்நிகழ்ச்சியை சூர்யா, முரளி, பவித்ரா மற்றும் சந்திரலேகா தொகுத்து வழங்கி வருகின்றனர், தினமும் காலை 7.00 மணிக்கு ஜோதிடர் ஹரிஷ் ராமன் கணிப்பில்  நம்முடைய  ராசி பலனை தெரிந்து கொள்ளவதுடன் நம்ம விருந்தினர் பக்கத்தில்  சிறப்பு விருந்தினர்களின் அனுபவங்களுடன் உதயமாகும் காலை மலரில் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் புலவர் சண்முகவடிவேல் அவர்களின் ‘சிரிப்போம் சிந்திப்போம் மற்றும் நமக்கு தெரியாத பல தகவல்களை தெரிந்ததும் தெரியாததும் பகுதியில் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர் நெல்லை சுப்பையா.

அதனை தொடர்ந்து செஃப் தீனா மற்றும் சுஜா கைவண்ணத்தில் கம கம சமையல் சேர்ந்து நம் காலை பொழுதை கமகமக்க வைக்கிறது,மாத்தி யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் பகுதியாக மாத்தி யோசியுடன் ,நம் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமையை சொல்லும் பாரம்பரிய வைத்தியம் போன்ற புதிய பகுதிகளுடன் புதிய வடிவில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது காலை மலர் நிகழ்ச்சி .

Leave a Reply

Your email address will not be published.