ஜெயா டிவி’யின் மார்கழி உத்சவ கர்நாடக சங்கீத விழா! தினமும் காலை 7.30 மணிக்கு…

‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை ஜெயா டிவி ஆண்டுதோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பிவருகிறது. இந்த 23வது ஆண்டில் ‘ராக வைபவம்’ என்ற தலைப்பில் கச்சேரிகள் ஒளிபரப்பபட்டுவருகிறது. ஒரு கச்சேரியில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் ஒரே ராகத்தில் பாடப்படும் அல்லது இசைக்கப்படும்.வரும் வாரங்களில் ஓ.எஸ்.அருண் (பெஹாக் ராகம்), மஹதி (தோடி ராகம்), Dr.கணேஷ் (மோகன ராகம்), ஜே.பி.கீர்த்தனா ஸ்ரீராம் (வசந்தா ராகம்), Dr.எஸ்.செளமியா (பந்துவராளி ராகம்) உள்ளிட்ட கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள். ராக வைபவம் எனும் புதிய தலைப்பில் இடம்பெறும் கச்சேரிகள் நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிகழ்ச்சி நாள்தோறும் காலை 7.30 மணிக்கும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 8.30 மணிக்கும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சியை பிரபல பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன் தொகுத்து வழங்குகிறார்.