தீபாவளியன்று கலைஞர் டி.வி.யில் சிவகார்த்திகேயனின் ‘டான்.’

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி நடிப்பில், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் ‘டான்.’
காமெடி, காதல் என குடும்பங்களை கவர்ந்து, 100 கோடி வசூல் சாதனை படைத்த இந்த படம் வருகிற அக்டோபர் 24-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
கூடவே அன்றைய தினம், திண்டுக்கல் லியோனியின் சிறப்பு பட்டிமன்றமும், கார்த்தி நடிப்பில் உருவான ‘சர்தார்’ படத்தின் சிறப்பு பார்வையும், ‘சமையல் வேட்டை’ சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெறவிருக்கிறது.