தீபாவளியன்று புதுயுகம் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் சிறப்பு விவாதம்!

உலகப் புகழ்பெற்ற தமிழ் நாவல் பொன்னியின் செல்வன் இன்றைக்கு தமிழகத்தின் பெரும் பேசு பொருளாக இருக்கிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அவற்றின் அருமை பெருமை அதில் இந்த நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் சோழ பாண்டிய வரலாறு இவற்றை குறித்த ஆச்சரியமான அபூர்வமான ருசிகரமான தகவல்களை கல்கி குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி நடராஜன், பத்திரிகையாளர் இலக்கியப் பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன், நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா, எழுத்தாளர்கள் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஜெயராம் ரகுநாத் ஆகியோர் இளைய தலைமுறையினருடன் பகிர்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.