பிரபல நிதியியல் வல்லுனர்கள் ஆலோசனையோடு பங்குச் சந்தையில் ஜெயிக்கலாம். வழிகாட்டும் புதுயுகம் தொலைக்காட்சி!
அமெரிக்காவின் வாரன் பஃபட் தொடங்கி இந்தியாவின் ராகேஷ் ஜூஜூன்வாலா வரை பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பங்குச் சந்தை ஒரு சிறந்த வழி என்று நிரூபித்துக் காட்டியவர்கள் பலர்.
சிறந்த நிறுவனங்களின் பங்குகள் எவை? அவை மேலும் விலை இறங்குமா, இறங்கினால் எவ்வளவு இறங்கலாம் ? எப்போது விற்கலாம்? போன்ற கேள்விகளுக்கு டெக்னிகல் மற்றும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் சூத்திரங்களின் அடிப்படையில் வழிகாட்டும் நிகழ்ச்சிதான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிசினஸ் எக்ஸ்பிரஸ்.”
பங்குச் சந்தையின் முழு வீச்சும் சாதாரண மக்களுக்குப் புரியும் விதத்தில் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை ஷேர் மார்கெட் (Share Market) நிலவரம் பற்றிய “பிசினஸ் எக்ஸ்பிரஸ்” நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சி, புதுயுகம் யூடியூப், புதுயுகம் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து புதுயுகம் யூடியூப், புதுயுகம் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் மட்டும் இந்த நேரலையானது 5.15 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேயர்கள் மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை 044-45969565 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு ஷேர் மார்க்கெட் நிலவரம் பற்றிய கேள்விகளை நேரலையில் கேட்கலாம்.
நேயர்களின் கேள்விகளுக்கு பிரபல நிதியியல் வல்லுனர்கள் பங்கேற்று விளக்கம் அளிக்கின்றனர்.
—
