புத்தம் புதிய நிகழ்ச்சிகள், புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சி அடுத்ததாக 2 மெகா தொடர்களை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது. அதில் ஒன்று, ரேடான் மீடியா சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ப்ரீத்தி சஞ்ஜீவ் நடிக்கும் பொன்னி C/O ராணி மெகா தொடர்.

இந்த தொடர் வருகிற ஜூன் மாதம் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவ்வும், பொன்னிக்கு பக்கபலமான ஒரு கதாபாத்திரத்தில் ராணியாக ராதிகாவும் நடிக்கிறார். வருகிற ஜூன் முதல் சொந்த பந்தங்களை அரவணைத்து, கணவனுக்கு பக்கபலமாக இருந்து குடும்ப வளர்ச்சிக்காக நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவிகளில் ஒருத்தியாய் வருகிறாள் பொன்னி.

இந்த நெடுந்தொடரில், பொன்னியின் கணவராக ராஜாராம் என்கிற கதாபாத்திரத்தில் மனோகரும், ராஜாராமின் அத்தை மகளாக வில்லி கதாபாத்திரத்தில் ராகவியும் நடிக்கிறார்கள்.

வசதியில்லாத, படிக்காத ராஜாராமை திருமணம் செய்ய மறுக்கும் ராகவி, வசதியுள்ள ஆனந்த்தை திருமணம் செய்ய, மனமுடைந்து போகும் ராஜாராம் படிக்காத பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, பொன்னியை மணக்கிறார். பொன்னி, ராஜாராமின் தொழிலுக்கு பக்கபலமாக இருப்பதுடன் அவரது தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறார். ராஜாராம், பொன்னியின் வளர்ச்சியை பொறுக்காத ராகவி ராஜாராம், பொன்னிக்கு எதிராக தனது சதி வலைகளை வீசுகிறார்.

ராகவியின் சூழ்ச்சியில் ராஜாராம் எப்படி சிக்குகிறார்? ராணியின் துணையுடன் ராகவியின் சூழ்ச்சிகளை பொன்னி எப்படி முறியடிக்கிறார்? என்பதே இத்தொடரின் விறுவிறுப்பான மீதிக்கதை.

இந்த தொடரில், பபிதா, ராம்நாத், வெற்றி, அர்ஜூன், தனலெட்சுமி, சங்கரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp