பரத் – வாணி போஜன் நடிப்பில் ‘மிரள்.’ நடிகர் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்து!

பரத் – வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிரள்.’
ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கவிருக்கிறது.
இந்த படத்தில் பரத், வாணி போஜன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க இவர்களோடு, கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் படங்களைத் தயாரித்த ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி டில்லிபாபு அடுத்ததாக தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்!