‘சிறுத்தை’ சிவா இயக்க, சூர்யா நடிக்கும் புதிய படம்… படப்பிடிப்பு இனிதே துவக்கம்!

சூர்யா நடிக்கும் புதிய படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இது சூர்யா நடிக்கும் 42-வது படம் என்பதால் ‘சூர்யா 42’ என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று உற்சாகமாக தொடங்கியது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த படம் மூலம் இயக்குனர் சிவா, ரசிகர்களுக்கு மற்றொரு மெகா விருந்தை தரவுள்ளார். இப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்ட, மாறுபட்ட படைப்பாக இருக்கும்.

படம் பற்றிய கூடுதல் விவரங்கள்:-

இந்த படம், ஸ்டுடியோ கிரீன் (Studio Green) நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான் – இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்துடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி சங்கர் திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். மேலும் தொழில்நுட்பக் குழுவில்  ஹரி ஹர சுதன் (சிஜி), ராஜன் (காஸ்ட்யூமர்), C.H. பாலு (ஸ்டில்ஸ்), கபிலன் செல்லையா (வடிவமைப்பாளர்), குப்புசாமி (மேக்கப்), சுரேஷ் சந்திரா & ரேகாD’One (மக்கள் தொடர்பு), ஷோபி (நடன அமைப்பு), தாட்சயினி (காஸ்ட்யூம் டிசைனர்), அனு வர்தன் (ஹீரோவுக்கு ஆடை வடிவமைப்பாளர்), நாராயண ( இணை எழுத்தாளர்), மற்றும் R.S.சுரேஷ்மணியன் (புரடக்சன் கண்ட்ரோலர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

70

Leave a Reply

Your email address will not be published.