அதர்வா நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில், பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும் படம் ‘ட்ரிகர். இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 23-ம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாகிறது.

அதையொட்டி சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவில் ‘ட்ரிகர்’  படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா ஆகியோர் படம் குறித்து மாணவிகளிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர்  சுருதி நல்லப்பா, ”எங்கள் படத்தினை பற்றி உங்கள் முன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இப்படத்தினை பற்றி முதன் முதலில் இயக்குநர் சாம் ஆண்டன் கூறியபோது கதை மிகவும் பிடித்திருந்தது. அதர்வா நடிக்க ஒப்புக்கொண்டதாக சொன்னவுடன் உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  நீங்கள் அனைவரும் தியேட்டரில் படம் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சாம் ஆண்டன், ”நீங்கள் அனைவரும் அதர்வாவை ரசிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. எங்கள் பட வெளியீட்டை ஒட்டி  இங்கு  உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ட்ரிகர் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ‘100’ என்ற படம் எடுக்கும்போதே அதர்வாவிடம் மீண்டும் படம் செய்ய பேசியிருந்தேன். அதர்வாவுடன் வேலை செய்வது மிக எளிது. அவர் கடினமான உழைப்பாளி. இந்தப்படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் அதர்வா, ”இங்கு கல்லூரியில் உங்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது. மீண்டும் கல்லூரி செல்ல ஆசையாக இருக்கிறது. எங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வருவது மகிழ்ச்சி.

உங்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு நல்ல படம் செய்துள்ளோம். 100 படத்திற்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற போது யோசித்தேன் ஆனால் இந்தப்படத்தின் கதை மிக புதுமையாக இருந்தது. நான் வழக்கமான பாத்திரங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் அனைவரும் பாருங்கள்” என்றார்.

விழாவில் கல்லூரி மாணவர்கள் சார்பில் அதர்வா மற்றும் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

படக்குழு:-

ஜிப்ரான் – இசை
கிருஷ்ணன் வசந்த் – ஒளிப்பதிவு
ரூபன் – படத்தொகுப்பு
திலீப் சுப்பராயன் – ஆக்‌ஷன் கோரியோகிராஃபர்
ராஜேஷ் – கலை இயக்கம்
தீபாலி நூர் – காஸ்ட்யூம் டிசைனர்
கோபி பிரசன்னா – விளம்பர வடிவமைப்பாளர்
சுரேஷ் சந்திரா & ரேகா D one – மக்கள் தொடர்பு
Lorven Studios (VFX), ஓமர் – நிர்வாகத் தயாரிப்பாளர்
கோகுல்.K – கிரியேட்டிவ் புரடியூசர்

 

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp