கலைநயமிக்க இடங்களில் படப்பிடிப்பு… பெயருக்கேற்ப ‘பியூட்டி’யாக உருவான ‘பியூட்டி.’

பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் கோ.ஆனந்த சிவா இயக்கியிருக்கும் படம் ‘பியூட்டி.’ இந்த படத்தில், ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘பியூட்டி’ என்ற பெயருக்குப் பொருத்தமாக தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னையிலும், ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியின் பூந்தோட்டம், இரயில்வே நிலையம், விதவிதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்கள் என கலைநயத்துடன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
படத்தில் இலக்கியன் இசையில், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘இத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?’ என்ற பாடல் இடம்பெறுகிறது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அழகு கொட்டிக்கிடக்கும் பூந்தோட்டங்களில் இந்தப் பாடல் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வெளியானபிறகு அது காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்’ என்கிறார்கள் படக்குழுவினர்.
படம் பற்றி இயக்குநர் ”தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்தபோது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே சைக்கலாஜிகல் லவ் த்ரில்லர் சப்ஜெக்டில் கார், பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறோம்” என்றார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை ஆர்.தீபக்குமாரின் ‘ஓம் ஜெயம் தியேட்டர்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
‘பியூட்டி’ படத்தின் ஸ்டில்ஸ்