பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் இயக்கும் ‘பாபா பிளாக் ஷீப்.’ கோடை விடுமுறை கொண்டாட்டமாக தியேட்டர்களில்…

பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பாபா பிளாக் ஷீப்.’ இந்த படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிக்கால வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் விதமாக ‘பாபா பிளாக் ஷீப்’ உருவாகிறது.

இந்த படத்தில் பிரபல ‘பிளாக் ஷீப்’ யூ டியூப் சேனல் நிறுவனர் விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 2023 கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படக்குழு:-

கலை – மாதவன்
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
நடனம் – அசார்
பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
புரொடக்‌ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp