தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ் குமார்!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுடன் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரும் இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘ராக்கி’, சாணிகாயிதம்’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு: ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்),  நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்

 

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp