‘கல்லூரி’க்காக போட்ட உழைப்புக்கு பலன் தந்த ‘காலேஜ் ரோடு.’ அர்ப்பணிப்பால் ஹீரோவான லிங்கேஷ்!

இந்த வருடத்தின் நிறைவு வாரத்தில் ரிலீஸாகவிருக்கும் படம் ‘காலேஜ் ரோடு.’ இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள லிங்கேஷ் பல படங்களில் வில்லனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்.
லிங்கேஷ் நடித்த ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை, அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தாலும் கதாநாயகன் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.10 வருடங்களுக்கு முன் ‘கல்லூரி’ படத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் குறைத்து இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்த லிங்கேஷ், சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தொகுப்பாளராக கலையுலகப் பயணத்தை தொடர்ந்தவர் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகன் என்ற பெயரை சம்பாதித்தார்.
அன்று ‘கல்லூரி’யை தவற விட்டவரின் தொடர் முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் ஹீரோவாக்கியிருக்கிறது!மாணவர்களின் கல்விக் கடன் பற்றி பேசியிருக்கும் இந்த படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
சில நாட்கள் முன் இயக்குநர் ரஞ்சித் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளதும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ஆகவே படம் பல தரப்பிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்!
வரும் டிசம்பர் 30-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பி.வி.ஆர். பிச்சர்ஸ் வெளியிடுகிறது.