கெளதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்.’ 40 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு!

கெளதம் கார்த்திக், சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் ‘கிரிமினல்.’ இந்த படத்தை மதுரை பின்னணியில் கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் திரைக்கதையமைத்து இயக்குகிறார் தக்ஷிண மூர்த்தி ராம்குமார். பார்சா பிக்சர்ஸ் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்ஐபி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. 40 நாட்களில் படத்தின் மொத்த காட்சிகளையும் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.துவக்கவிழாவில் பார்சா பிக்சர்ஸ் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் பேசியபோது, ”கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் தெரிவார்” என்றார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்ஐபி கார்த்திகேயன் பேசும்போது “இந்த படத்தின் கதையும், இயக்குநர் அதை திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குநர் சொல்வது போலிருந்தது. கெளதம் கார்த்திக், சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
படத்தின் தொழில்நுட்பக் குழு:-
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: பிரசன்னா S குமார்
படத்தொகுப்பு: மணிகண்ட பாலாஜி
