ஸ்ரீ ஹீரோவாக நடிக்கும் ‘ஈடாட்டம்’ படத்தில் 3 ஹீரோயின்கள்!

’சின்னா’, விஜயின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்டவர். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்.’

இந்த படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தை கதை எழுதி, இயக்கியிருக்கிறார் ஈசன்.

வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசஜை காதல், காமெடி, செண்டிமெண்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை.

யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு இசையமைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘ஈடாட்டம்’ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென் முத்துராஜ் படத்தொகுப்பு செய்கிறார். கலை செந்தில், ராதிகா நடனம் அமைக்க, ஹார்ஸ் சுரேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையாளரா பணியாற்றுகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp