‘என்ஜாய்’ சினிமா விமர்சனம்

பணத்துக்காக தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு அறிவுரை சொல்கிற படம். சொன்னவிதம் ஏகத்துக்கும் ‘A‘டாகூடம்.
கதையம்சம் கொஞ்சமே கொஞ்சம். ‘என்ஜாய்’ என்ற பெயருக்கேற்ப சதையம்சம் தூக்கல்!
கதையில் ஒரு பெண்கள் கல்லூரி. அதில் படிக்கும் பண வசதியுள்ள பெண்கள், வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் சக மாணவிகளின் உடை, வைத்திருக்கும் செல்போன் உள்ளிட்டவற்றில் வெளிப்படும் ஏழ்மையை கேலி செய்கிறார்கள். அந்த கேலி கிண்டலில் திமிரும் வன்மமும் நிறைந்திருக்க, எளிய குடும்பத்து மாணவிகள் மூன்று பேர் மனம் நொறுங்கிப் போகிறார்கள்.
விலையுயர்ந்த மொபைல் போன், காஸ்ட்லியான காஸ்டியூம் என தங்களை தரம் உயர்த்திக் கொள்ள பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார்கள். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் விளைவுகள் பயங்கரமாக இருப்பதும், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளுமே கதை… இயக்கம்: பெருமாள் காசி
மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார்,
நிரஞ்சனா, ஜீ.வி அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா, யோகிராம் என முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கதைக்குத் தேவையானதை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்.
பணம் தர தயாராக இருப்பவர்களிடம் உடல் சுகத்தைப் பகிர முன்வரும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகளை எடுத்துச் சொல்லி எச்சரித்த விதத்தை (மட்டுமே) பாராட்டலாம்!
மற்றபடி – கிளுகிளுப்பில் தொடங்கி ஆபாசத்தில் மூழ்கியிருக்கிற காட்சிகளும் வசனங்களும் 18+ இளைய தலைமுறைக்கு ‘என்ஜாய்’தான்!