ஆன்மிகத் தேடலோடு ஆழமான உண்மையை மையமாக கொண்ட ‘ஜம்பு மகரிஷி.’ ஏப்ரலில் உலகமெங்கும் வெளியீடு

புதுமுக நடிகர் பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ அஸ்மிதா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி.’ இந்த படத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்துள்ள பாலாஜி, பி. தனலட்சுமியுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.சென்சாரில் பாராட்டுக்களுடன் கூடிய யூ சான்றிதழ் பெற்ற இந்தபடம் ஓரே நேரத்தில் தமிழ்,தெலுங்கில் வரும் ஏப்ரல் மாதம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

படக்குழுவினர் குறித்த விவரம்:-
இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா
பாடல்கள் – பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ்
வசனம் – பி.புவனேஸ்வரன்
ஒளிப்பதிவு – பகவதி பாலா
நடன பயிற்சி – சிவசங்கர்
சண்டைப் பயிற்சி – டிராகன் பிரகாஷ்
படத் தொகுப்பு – ராஜ் கீர்த்தி

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp