என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும்! – ‘கொடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு 

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில், வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ .

இப்படத்தில் நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஐந்து பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 17.8. 2022 அன்று நடந்தது.

இயக்குனர் ராஜா செல்வம், இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளை கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள்” என்றார்.

இசையமைப்பாளர் சுபாஷ் கவி, இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்” என்றார்.

நாயகன் கார்த்திக் சிங்கா, இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது” என்றார்.

நடிகர் ராதாரவி, பாடல்களின் இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன்; அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன், கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது. இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை. படம் சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்:-

தயாரிப்பு நிறுவனம்: எஸ்எஸ் பிக்சர்ஸ்
எழுத்து இயக்கம் : ராஜசெல்வம்
இசை: சுபாஷ் கவி
ஒளிப்பதிவு: அர்ஜுனன் கார்த்திக்
எடிட்டர்: G.சசிகுமார்
கலை: K.M.நந்தகுமார்
நடனம்: தினேஷ், ராதிகா
சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆடைகள்: P.ரெங்கசாமி
ஒப்பனை: P.S.குப்புசாமி
ஸ்டில்ஸ்: மோகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp