சந்தன வீரப்பன் நினைவிடத்தில் ‘மாவீரன் பிள்ளை’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

சந்தன வீரப்பனின் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மாவீரன் பிள்ளை.’
கே.என்.ஆர். மூவிஸ் சார்பில் கே.என்.ஆர். ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது.
அதையொட்டி படத்தின் நாயகன் ராஜாவும், விஜயலட்சுமியும் வீரப்பனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள். அதையடுத்து ‘காடுவெட்டி’ குருவின் நினைவிடம் சென்று அங்கேயும் போஸ்டரை வெளியிட்டார்கள்.