தமிழ் சினிமாவில் பரபரப்பு, எதிர்பார்ப்பு… யார் அந்த ‘BIG ஸ்டார்?’

‘BIG ஸ்டார்’ பட்டத்தோடு ‘ 90’ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்’ என்கிற படத்தில் பிரபஞ்சன் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ‘BIG ஸ்டார்’ என அறிமுகமாவது யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அந்த விவரம் மட்டுமல்ல; படம் சொல்லும் கதை என்ன, படம் எதைப் பற்றிப் பேசுகிறது என்கிற விவரங்களும் விரைவில் தெரியவரும்.

இந்த படத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள்.

‘திட்டிவாசல்’ படத்தின் இயக்குநர் மு.பிரதாப் முரளி, ரிவான் என்னும் புனைபெயரில் இயக்கும் இப்படத்தை ‘என் & என் சினிமாஸ்’ சார்பில் கோவை சசிகுமார் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு கோவை நீலகிரி மற்றும் சென்னையில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ஜெர்மன் விஜய் இசையமைக்கிறார். பாடல் வரிகளை பா. விஜய் எழுதியிருக்கிறார். பாடல்கள் ஹரிஹரன், ஹரிணி, பாம்பே ஜெயஸ்ரீ , ஜாசி கிப்ட், திப்பு உள்ளிட்ட முன்னணி பாடகர்களின் குரலில் உருவாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp