எஸ்.ஏ.சி. இயக்கத்தில் பரபரப்பாக தயாராகும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடித்த சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ஒரு சண்டைக்காட்சி சென்னை வடபழனியிலுள்ள ஒரு  ஜிம்மில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார்.

ரிஸ்க்கான அந்த சண்டைக் காட்சியில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டியுள்ளார்.

படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் வைத்து கடைசியாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

இந்த படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ் எஸ் சந்திரசேகர் கூறுகிறார். ஏனென்றால் அவர் இரண்டு சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தில் இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். டயானா ஸ்ரீ என்கிற இளம் பெண், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்திலும் தொடர்கிறார்.  அவரது பரபரப்பான பாணி இப்போதும் தொடர்வதற்கு இந்தப் படம் சாட்சியாக இருக்கும்.

படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  படம்  அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp