தனித்துவமான கதையில் யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘பொம்மை நாயகி.’ பிப்ரவரி 3-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

தந்தை – மகள் சம்பந்தப்பட்ட அழுத்தமான கதைக்களத்தில், கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும் படம் ‘பொம்மை நாயகி.’

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபுவுடன், சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.

எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான போராட்டமுமே கதைக்களம். யோகிபாபு இந்த படத்தில் தனித்தன்மையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

‘பொம்மை நாயகி’ யோகிபாபு நடித்தவற்றில் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என நம்பலாம்!

படத்தின் தொழில்நுட்பக்குழு:
ஒளிப்பதிவு -அதிசயராஜ்
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு
பாடல்கள் – கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு
ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம்
உடைகள் – ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp