‘ஆப்’ மூலம் வரும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வோடு சர்ச்சைகளும் உண்டு! -‘பகாசுரன்’ படம் பற்றி இயக்குநர் செல்வராகவன் 

இயக்குநர் மோகன். ஜி ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் அடுத்ததாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்.’

இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, சசி லையா, ரிச்சா, கூல்ஜெயந்த், ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குநராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் மோகன். ஜி பேசும்போது, ” ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்கள் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதை போலவே பகாசூரனும் சேலம், ஆற்காடு, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கதை.தற்போது சமூகத்தில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்கள், இணையவழி விபச்சாரம், வீடியோ கால் (Virtual Prostitution) உள்ளிட்டவை மூலம் நடக்கிற விபச்சாரம் ஆகியவை பற்றி அலசி, மக்களுக்கு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே அவர் நடித்த ‘பீஸ்ட்’ படம் வெளிவந்திருந்தாலும், கதையின் முக்கிய நாயகனாக அவர் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவே. நட்டி நட்ராஜ் செல்வ ராகவனுக்கு இணையாக ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

முந்தைய எனது படங்களைப் போலவே இந்த படத்திலும் ஒரு கதைக்களம் உள்ளது. நவீன கால மொபைலில் என்ன வகையான செயலிகள் ஆபத்தான வகையில் அமைந்துள்ளன; அவற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்வது எப்படி என்பதை விரிவாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் வெளியானபிறகே படத்திலுள்ள சர்ச்சைகள் பற்றி மக்களுக்கு தெரியவரும்; பேசப்படும்” என்றார்.

 

33

Leave a Reply

Your email address will not be published.