ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு நிதி வழங்க நடிகர் – நடிகைகள், அரசு அதிகாரிகளுக்கு விருதுகள்! ‘இன்டியன் மீடியா ஒர்க்ஸ்’ ஜான் அமலன் ஏற்பாடு!

சாமானிய மக்களை பிரபலமாக்கும் வகையில் Indian Media Works சார்பில் நடத்தப்படும் Indian Awards 2022 மற்றும் Mr Miss & Mrs Thamizhagam நிகழ்ச்சிகளின் இறுதிப்போட்டி வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னை கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.

விருதுகள் வழங்கப்படுவதற்கான அறிவிப்பை விஷால் ஜெயின், பெரியசாமி, யோகேஷ், ஜான் அமலன், அரவிந்த் பாலாஜி, Avmk சண்முகம், சிமு ஜார்ஜ் மற்றும் வினோத் ஆகியோர் வெளியிட்டனர்.

Indian Awards 2022 மற்றும் Mr Miss & Mrs Thamizhagam நிகழ்ச்சியில் சுமார் 100 பிரிவுகளின் கீழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் நடிகைகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தவிர, Mr Miss & Mrs Thamizhagam போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கிரீடத்துடன், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

மேலும், வெற்றியாளர்கள் துபாய் போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயை இந்திய ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp