ரிலீஸுக்கு தயாராய் ‘காலேஜ் ரோடு.’ இயக்குநர் பா. இரஞ்சித்திடம் பாராட்டு பெற்று உற்சாகமான படக்குழு!

‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘V1’, ‘டாணாக்காரன்’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு.’

இந்த படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, ‘நாடோடிகள்’ பரணி, ‘மெட்ராஸ்’ வினோத், ‘அருவி’ பாலா உள்ளிட்ட நடிகர்கள், ந்டிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் ஜெய் அமர்சிங் பேசியது… இந்த படம் கல்வி நிலையங்களில் தொடர்கிற மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியம், அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா, ர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிற படமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கமர்சியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம் என்றார்.

இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். படத்தை பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.எம்.பி. என்டர்டெயின்மென்ட் பிரவீன் மற்றும் சரத் இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். வரும் 30-ம் தேதி, PVR நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

படக்குழு:- இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

 

 

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp