புதிய படத்தில் ‘ஈரம்’ அறிவழகன் – ஆதி வெற்றிக்கூட்டணி! ஹாரர் திரில்லராக உருவாகிறது

‘ஈரம்’ அறிவழகன் இயக்கி, தயாரிக்கும் புதிய படம் ‘சப்தம்.’ ஆதி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் 14.12. 2022 அன்று எளிமையான பூஜையுடன்  துவங்கியது.
தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.
படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில்…
‘சப்தம்’ பட பூஜை புகைப்பட தொகுப்பு:-

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp