மீண்டும் தேசிய விருது பெறுவார் அப்புக்குட்டி! -சொல்கிறார் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ இயக்குநர் ஏ.எல்.ராஜா

அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்.’ இந்த படத்தில் ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் சந்தான பாரதி, செந்தில் நாதன், ஏ.எல்.ராஜா, ‘குட்டிப்புலி’ வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.சாதிக்கத் துடிப்பவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை மையமாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி உயிரோட்டத்தோடு படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல்.ராஜா.

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தை இயக்குகிறார் ஏ.எல்.ராஜா.

‘நினைக்காத நாளில்லை’ படத்தில் வடிவேலு – பார்த்திபன் கூட்டணியில் ‘ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற…’ என்ற காமெடி, ‘தீக்குச்சி’ படத்தில் நரிக்குறவனாக படம் முழுவதும் வடிவேலு செய்த காமெடி போல், இந்த படத்திலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, ‘இந்த படத்தில் நடித்ததற்காக அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’ என்றார். படக்குழுவினர் குறித்த விவரம்:-

தயாரிப்பு டி.டி.சினிமா ஸ்டுடியோ, இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp