இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்க, அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘தண்டகாரண்யம்.’ கவனம் ஈர்க்கும் டைட்டில் லுக்!

‘பரியேறும் பெருமாள்’ படம் தொடங்கி இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சேத்துமான், ரைட்டர், , குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி என தொடர்ச்சியாக தரமான படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம். ஜெ பேபி உள்ளிட்ட இன்னும் சில படங்களையும் தயாரித்து வருகிறது.
அந்த வரிசையில் நீலம் புரொடக்சன்ஸின் 10-வது தயாரிப்பான ‘தண்டகாரண்யம்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் (பிப்ரவரி 6; 2023 அன்று) வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.படத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.
படத்தை நீலம் ஸ்டுடியோ மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கின்றன.ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படக்குழு:-
தயாரிப்பு: அதிதி ஆனந்த், எஸ்.சாய் தேவானந்த், எஸ்.சாய் வெங்கடேஷ்வரன், பா.இரஞ்சித்
இணை தயாரிப்பு: ரூபேஷ்
நிர்வாகத் தயாரிப்பு: பா.சரவணன், மனிட் பேடி,
பி. ஜே பிரகாஷ்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடல்கள்: உமாதேவி, அறிவு, தனிகொடி
ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா
எடிட்டிங்: செல்வா ஆர்.கே.
கலை: த.ராமலிங்கம்
சண்டைப்பயிற்சி: பிசி
நடனம்: ஸ்ரீகிரிஷ்.
சவுண்ட்: சுரேன்
உடைகள்: சுபீர்.
டிசைன்ஸ்: கபிலன்
மக்கள் தொடர்பு: குணா
