வாரிசோடும், துணிவோடும் 250 திரைகளில் ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ டிரெய்லர்!

ஷாந்தனு பாக்யராஜ் – ‘கயல்’ ஆனந்தி நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘இராவண கோட்டம்.’ இந்த படத்தை ‘மதயானை கூட்டம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாறன் இயக்கியிருக்கிறார்.
இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் இன்று (10.1. 2023) வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், படத்தை தயாரித்துள்ள ‘கண்ணன் ரவி க்ரூப்’ நிறுவனத்தின் கண்ணன் ரவி பேசும்போது, ”படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது. அடுத்ததாக எங்களின் ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரெய்லர் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ படங்களுடன் தமிழ்நாடு முழுதும் 250 திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவிருக்கிறோம்” என்றார்.
