ஜெயா டிவியில் நடிகை சுகாசினி! வெற்றியாளர்களின் அனுபவங்களை, குடும்ப உறவின் மேன்மையை எடுத்துச் சொல்லும் ‘நீ பாதி நான் பாதி!’

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயா டிவியில் சுகாசினியின் நிகழ்ச்சி வரப்போகிறது. ‘நீ பாதி நான் பாதி‘ என்ற இந்த நிகழ்ச்சியில் சுகாசினியுடன் திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

அப்பா மகள்,அண்ணன் தம்பி, அக்கா தங்கை,அம்மா பையன் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே துறையில் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களோடு, அவர்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் கடந்து வந்த பாதை என்னென்ன? என்பதை பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.

”இந்த நிகழ்ச்சி வெற்றிஅடைந்தவர்களின் அனுபவங்களை மட்டுமல்லாமல் குடும்ப உறவின் மேன்மையையும் சொல்ல வருகிறது” என்கிறார் சுகாசினி!

விரைவில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு நாமும் காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp