தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்பு பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா அவர்கள் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியதில் 10 லட்சம் ரூபாய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்களிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் பெற்று இந்த ஆண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 1002 உறுப்பினர்களுக்கு பரிசுகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு (18.10.2022 / செவ்வாய்) நடிகர் சங்க வளாகத்தில் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்க்கள் மனோபாலா, தளபதி தினேஷ், எம்.ஏ. பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.
நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர்கள் நாசர், விமல், கருணாஸ், மனோபாலா, விக்னேஷ், தளபதி தினேஷ், ஸ்ரீமன், நடிகை கோவை சரளா உள்ளிட்ட 11 பேரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்க நன்கொடை அளித்தனர்!