பாரதி மகளிர் கல்லூரியின் 58-ம் ஆண்டு விழா… அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பரிசளித்து உற்சாகம்!

சென்னை பாரதி மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் 58-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா நிகழ்வு கல்லூரியின் திறந்தவெளி கலையரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரி பேரவை ஒருங்கிணைப் பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான முனைவர் சு. தாரணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் டெ. கிளாடிஸ் அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, அனைத்து பாடப் பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினர்.
நிகழ்வின் நிறைவாக மாணவப் பேரவை பொறுப்பாளர் பத்மபிரியா நன்றியுரை வழங்கினார்.
உற்சாகமாக நடந்த இந்த நிகழ்வில் அனைத்துத் துறைத் பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
