‘பாக்கியம் சினிமா’ ஆண்டு விழா… பிரபலங்கள் கூடி உற்சாகம்!

பாக்கியம் சினிமா 11-ம் ஆண்டு விழா, முள்ளும் மலரும் 6-ம் ஆண்டு விழா சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை வடபழனி சிகரம் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் நீதியரசர் ஜோதிமணி, இயக்குனர் பேரரசு, இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகர், தயாரிப்பாளர் விஜய் முரளி பிஆர்ஓ, பெரு துளசி பழனிவேல், மக்கள் குரல் ராம்ஜி, மியூசிக் யூனியன் தலைவர் தீனா, பொறியாளர் தா மணிமாறன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி, அட்வகேட் நீதி செல்வன் தயாரிப்பாளர் காந்திமதி, இயக்குனர் ஹாருன், நடிகை அபிராமி, டாக்டர் அக்பர் கான், நடிகை டயானா ஸ்ரீ, ருத்ர மனோகரன், முள்ளும் மலரும் ஆசிரியர் பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இயக்குனர், நடிகர், பாக்கியம் சினிமா ஆசிரியரும் வெளியீட்டாளருமான ‘விண் ஸ்டார்’ விஜய் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.