ஜனவரி 14 முதல் 17 வரை புதிய படங்களோடு கலர்ஸ் டி.வி.யின் பொங்கல் கொண்டாட்டம்!

பொங்கல் பண்டிகையை பொழுதுபோக்குடன் கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 14 முதல் 17  வரை புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது.

ஒரு யமனின் காதல் கதையின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் 14 ஜனவரி 2023, சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.

நடிகர் துல்கர் சல்மான், நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் நடிகர் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் தினசரி கூலி ஓவியரான லல்லு மற்றும் அவரது நண்பர்கள் கும்பலின் வாழ்க்கையைப் பயணிக்கிறது. லல்லு (துல்கர் சல்மான்) வாழ்க்கைத் துணையைத் தேடி, செய்திகளில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறார். அவர் உடனடியாக அவளது புகைப்படத்தின் மீது காதலில் விழுந்து அவளைத் தேட முடிவு செய்கிறார். அவரைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.

இதைத் தொடர்ந்து, 15 ஜனவரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மற்றும் மாலை 5:30 மணிக்கு முதன்முறையாகத் ட்ரிகர் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர், கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது.

த்ரில்லர் திரைப்படமான இதில் நடிகர் அதர்வா பிரபாகரன் என்னும் கதாபாத்திரத்தில் தலைமறைவான போலீஸ்காரராக நடித்திருக்கிறார்.குழந்தை கடத்தல் மோசடியின் பின்னணியில் இருக்கும் மூளையை (நடிகர் ராகுல் தேவ்) தடுக்கும் தேடலில் ஈடுபடுகிறார். குற்றம் மற்றும் ஊழல் உலகை ஆராய்வதற்கு, ஜனவரி 15, ஞாயிறு மதியம் 2:30 மற்றும் 5:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் டியூன் செய்யுங்கள்.

இது மட்டுமின்றி, 16 ஜனவரி 2023, திங்கட்கிழமை, முறையே மதியம் 2:30 மற்றும் மாலை 5:00 மணிக்கு பஃபூன் மற்றும் பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படங்களை கண்டு மகிழுங்கள்.

17 ஜனவரி 2023 செவ்வாய்க் கிழமையன்று மதியம் 1:30 மணிக்கு நித்தம் ஒரு வானத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்.

நடிகர் அசோக் செல்வன், நடிகர் அபர்ணா பாலமுரளி மற்றும் நடிகை ரிது வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நம்பிக்கைகள், காதல் மற்றும் புதிய தொடக்கங்களை ஆராய்கிறது. அர்ஜுன் (அசோக் செல்வன்) என்ற OCD எனும் அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு உள்ள உள்முக சிந்தனையாளரின் வாழ்க்கையைச் சுற்றி வரும். இந்தத் திரைப்படம், உண்மையான மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கதைகளைப் படித்து அவற்றின் முடிவுகளைத் தேடிச் செல்லும் அவரது பயணத்திற்கு சாட்சியாக இருக்கிறது. 17 ஜனவரி 2023 அன்று மதியம் 1:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் டியூன் செய்து பார்க்கலாம்.

இந்த சனிக்கிழமை, ஜனவரி 14 முதல், கலர்ஸ் தமிழை டியூன் செய்து பொங்கல் பண்டிகையை இன்னும் சுவாரசியமாக்க உங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp