மணமேடையில் மாறும் மாப்பிள்ளை; மனம் நொறுங்கும் ஹீரோயின்! கலர்ஸ் தமிழின் ‘மந்திரப் புன்னகை’ நெடுந்தொடரின் மனதை ஈர்க்கும் இரண்டாவது விளம்பரம்!

அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழில், விரைவில் வெளிவரவிருக்கும் ‘மந்திரப் புன்னகை’ என்ற புதிய நெடுந்தொடருக்கான இரண்டாவது புரோமோவை அதாவது விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ்.

அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கும்  இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது விளம்பரம், அதன் தனித்துவமான சித்தரிப்பின் மூலம் பார்வையாளர்களது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து  இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் காயத்ரி (மெர்ஷீனா நீனு), கதிர் (ஹுசைன் அகமது கான்) மற்றும் குரு விக்ரம் (நியாஸ் கான்) ஆகியோர் இடம்பெறுகின்றனர். இந்த மூவரின் வாழ்க்கையும் ஒரு பாதையில் குறுக்கிடுகின்றன. அதன்பிறகு எதிர்பாராத தொடர் நிகழ்வுகளில் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

ஒருவரின் வாழ்க்கையில் ஆனந்தமான நாள் எதிர்பாராத பயங்கரங்கள் நிறைந்த தினமாக மாறினால் என்ன செய்வது? இந்நெடுந்தொடரின் வியத்தகு விளம்பரம், ஒரு கனவு போன்ற திருமண சடங்குகளின் தொகுப்பை நேர்த்தியாக காட்டுகிறது. இதில் திருமண மேடையில் கதாநாயகி காயத்ரி, கதிர் என்ற இளைஞனை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாள், ஆனால் தனது கழுத்தில் குரு விக்ரம்  தாலி கட்டுவதைப் பார்க்கும்போது அவளது அழகான கனவு சுக்குநூறாக உடைந்துபோகிறது.

கதிர் அவளைக் கைவிட்டுவிடும் அளவுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு சாத்தியமான காரணம் என்னவாக இருக்கும்? இது அவளது கற்பனையா அல்லது காயத்திரியின் கனவு எதார்த்தத்தில் ஒரு எதிர்பாராத நிகழ்வாக உண்மையிலேயே மாறியிருக்கிறதா? நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான கதையும், விறுவிறுப்பான நிகழ்வுகளும் நமக்காக காத்திருக்கின்றன.

அந்த வகையில் பல திருப்பங்களுடன் பார்வையாளர்களை பரபரப்பாக்கப் போகிறது ‘மந்திர புன்னகை.’

விளம்பர இணைப்புகள்:

YouTube: https://www.youtube.com/watch?v=FwBC4jJbREA

Facebook: https://fb.watch/enJm8qH5qv/

Instagram: https://www.instagram.com/p/CgGS1BLoRxy/?igshid=MDJmNzVkMjY=

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp