திரைப்பட முன்னோட்டம் போல் உருவான ‘எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம்!

வீடியோ ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பும்,  அப்படியான பாடல்களை உருவாக்குபவர்களும் அதிகரித்து வருகிற சூழலில் புதிய வரவாக ‘எது நிஜம் என் கண்மணி’ பாடல் வெளியாகியிருக்கிறது.

பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார்.
விஸ்வந்த் டுடும்புடி நாயகனாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பத்து படங்கள் நடித்தவர். மேகலை மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சில மும்பை மாடல் அழகிகளும் நடித்துள்ளார்கள் .

 

இது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது .இதற்கு இசை அமைத்துள்ளவர் சுபாஷ் ஆனந்த் .பாடல் எழுதியவர் இயக்குநர் எஸ். பி. ஹோசிமின்.ஒளிப்பதிவு செய்துள்ளவர் பிரசன்ன குமார் மற்றும் வினோத்குமார் எஸ். அருண்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.டி.சி.பி. உதய் நடனம் அமைத்துள்ளார்.

இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ள விவேக் கைப்பா பட்டாபிராம் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.தமிழ், தெலுங்கில் சில குறும்படங்களையும்  விளம்பரப்படங்களையும் இயக்கியுள்ளார்.டிவி ரியாலிட்டி ஷோ தயாரித்திருக்கிறார். தெலுங்கானா அரசுக்காக பல்வேறு ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுத்துள்ளார்.

திரைப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் போல் இந்தப் பாடலை உருவாக்கி உள்ளார். ஒரு திரைப்படத்திற்கான பாடல் உருவாக்கத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இதில் செய்துள்ளார். அது மட்டுமல்ல திரைப்படத்தில் வரும் பாடலைத் தாண்டி ஒரு புது முயற்சியாக புது பாணியில் புது வடிவத்தில் தெரியும்படி தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்.இந்தப் ஆல்பம் பாடலை ஜெயண்ட் மியூசிக் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். இது முழுக்க முழுக்க கோவாவில் படமாகி உள்ளது.திரைப்படப் பாடலும் ஆல்பம் பாடலும் ஒன்றாகத் தெரியக்கூடாது என்கிற வகையில் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்து உருவாக்கி உள்ளார் இயக்குநர்.

இந்த ஆல்பம் பாடல் ‘சின்னஞ்சிறு மழைத்துளியே சிறு காட்சிப் பிழையே’ என்று தொடங்குகிறது.”இந்தப் பாடலை எழுத இயக்குநர் எஸ். பி .ஹோசிமினிடம் தயக்கத்தோடு கேட்டபோது அவர் முழு மனதோடு ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார்.அவரது பெருந்தன்மைக்கு நன்றி.

ஆல்பத்தின் பெயரே இந்த ஒரு சிறு பாடலில் உள்ள கதையைச் சொல்லும். எப்போதும் புதிய முயற்சிகளை ஆதரிக்கும் தமிழ்த் திரை உலக ரசிகர்கள் இதையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் “என்று அடக்கமாகக் கூறுகிறார் இயக்குநர் விவேக்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp