பிரபல சமையல் வல்லுனர்கள் சொல்லித்தரும் தீபாவளி பலகார செய்முறை! அக்டோபர் 17 தேதி முதல் ஜெயா டி.வி.யில்…

தீபாவளி இனிப்பு கார வகைகள். இந்த இனிப்பு கார வகைகள் நம் வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி தான் ‘தித்திக்கும் தீபாவளி.’

இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை தினமும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22 ஆம் வரை மாலை 5:00 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு மறு நாள் பகல்1:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 

ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து சமையல் கலைஞர்கள் மற்றும் வல்லுனர்கள் மல்லிகா பத்ரிநாத் ,சித்ரா முரளி ,பழனிமுருகன் ,சரவணன் ,சுஜா ,பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை செய்முறை விளக்கத்தோடு சமையல் செய்து காண்பிக்கும் இந்நிகழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு விருந்தாய் அமையும் .

இந்நிகழ்ச்சியை யூ டியூப்  பிரபலம் மோகனா தொகுத்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.