செஃப் தாமுவின் கைப்பக்குவத்தில் ‘என்ன சமையலோ.’ ஜெயா தொலைக்காட்சியில் புதன் மாலை 5 மணிக்கு…

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்ன சமையலோ என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் தாமு விதவிதமான அசைவ மற்றும் சைனீஸ் உணவு வகைகளை செய்து காட்டுவதோடு, ரசிகர்களின் சமையல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பதிலும் அளிக்கிறார்.
நிகழ்ச்சியை பிரபல யூ டியூபர் மோகனா தொகுத்து வழங்குகிறார்.