‘பொன்னியின் செல்வன் – வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்.’ கல்கி ஆன் லைன் யூ டியூப் சேனலில் பார்க்கலாம்; ரசிக்கலாம்!

கல்கி பத்திரிகை குழுமம் தயாரித்திருக்கும் ‘பராக்… பராக்…பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்’ என்ற காணொளித் தொடர் வரிசையின் முதல் காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி 23.9. 2022 வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடந்தது.
நிகழ்வுக்கு தலைமையேற்று முதல் காணொளியை அமைச்சர் (தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை) தங்கம் தென்னரசு வெளியிட்டு விரிவான உரை நிகழ்த்தினார்.
அந்த நிகழ்வு குறித்த செய்தித் தொகுப்பு இதோ…
எழுத்தாளர் கல்கி பொன்னியின் செல்வனில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு வந்தியத்தேவன் சென்ற பாதையில் மக்கள் பயணித்து, அவற்றைக் கண்டு களித்து, சரித்திர நிகழ்வுகளை அப்போதைக்கு அப்போதே அனுபவித்து மகிழ வேண்டும் என்கிற எண்ணத்தில் 16 பகுதிகள் கொண்ட மாபெரும் காணொளித் தொடரை கல்கி குழுமம் தயாரித்துள்ளது.
சரித்திரம், இலக்கியம், பயணம் என்ற முப்பரிமாண அம்சங்களுடன் கண்கவர் காமெரா காட்சிகள் கொண்ட சிலிர்ப்பூட்டும் படைப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று நூல் விரும்பிகளின் கனவு தொழிற்சாலையான பொன்னியின் செல்வன், ஒவ்வொருவரின் விருப்பு நூல், என்பதால், அனைவரையும் கவரும் விதத்திலும், சிந்திக்க வைக்கும் வகையிலும், 30 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 4 மணி நேர தயாரிப்பானது, 16 வீடியோ தொகுப்புகளாக 24.09.2022 முதல் 09.10.2022 வரை தினம் ஒரு பகுதியாக வெளியிடப்பட உள்ளன.
வீடியோ தயாரிப்பு பற்றி :
கல்கி குழுமம் சார்பாக இந்த பிரமாண்ட அனுபவ பயணத்தொடரை தயாரித்துள்ளார் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தி, கல்கி குழும உரிமையாளர் மற்றும் CEO, திருமதி. லக்ஷ்மி நடராஜன்.
வரலாற்றின் மீதுள்ள உண்மையான நேசத்துடனும், ஆர்வத்துடனும், ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் இந்தப் பயணத் தொகுப்பை வழங்கி, தானே அதை வழிநடத்தியும் செல்கிறார், பத்திரிகையாளரும், சரித்திர நாவலாசிரியருமான ‘காலச்சக்கரம்’ நரசிம்மா என்கிற டி.ஏ. நரசிம்மன். ஆங்காங்கே ஊர்களின் பெயருக்கான காரணத்தையும், மருவி போன பெயர்களையும், அதிகம் அறியப்படாத சுவாரஸ்ய தகவல்களையும் குறிப்பிட்டு, இந்தப் பயணத்தை சுவாரசியப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Busiupadvt நிறுவனத்தைச் சார்ந்த ராஜ்கமல் தனது குழுவினருடன், மிகுந்த உற்சாகத்தோடு சரித்திரப் புகழ் மிக்க இந்தத் தலங்களை சுற்றி வந்து, கண்கவர் காமெரா காட்சிகளை படம் பிடித்துள்ளார்.
தமது ஓவியங்கள் வாயிலாக இறைப்பணி செய்துவரும் பத்மவாசனின் ஓவியங்கள் இந்தத் தயாரிப்பில் சேர்க்கப்பட்டு பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது.
பின்னணி இசையமைத்து விறுவிறுப்பு கூட்டியுள்ளார் மோகன் ராம்.
பாரெங்கும் பரவியிருக்கும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் Subtitles வழங்கியுள்ளார் ஸ்ரீராம் பக்வத்.
ப்ரியா பார்த்தசாரதி மற்றும் கல்கி குழும பொதுமேலாளர் பிரபாகர் தயாரிப்பு மேற்பார்வை செய்து உதவியிருக்கிறார்கள்.
கல்கி குழும பணியாளர்கள் அனைவரும் தத்தம் பணியினை மிகச் சிறப்பாக ஆற்றி, ஒத்துழைப்பு நல்கி உள்ளனர்.
முதல் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி:
இந்த வீடியோ தொகுப்பின் முதல் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி செப்டெம்பர் 23 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லி மேஜிக் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
தமிழகத்தின் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர், திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையேற்று முதல் வீடியோவினை வெளியிட்டார்.
முதல் வீடியோ திரையிடப்பட்டதும் படக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. மேலும் “மகுடம் யாருக்கு ?” பொன்னியின் செல்வன் நேரலை வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த காணொளித் தொடர் Kalkionline YouTube சேனலில் 24.09.2022 முதல் தினந்தோறும் இரவு 8 மணிக்கு தொடர்ந்து 16 நாட்களுக்கு வெளியிடப்படும் என்றும், உலகளவில் திரண்டிருக்கும், ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்களை ஒருங்கிணைத்து, கால யந்திரத்தில் அவர்களைக் கூட்டிச் சென்று, சோழர் சரித்திரத்தை நுகரச் செய்வதே இம்முயற்சியின் நோக்கம் என்றும் கூறினார் கல்கி குழுமத்தின் CEO லக்ஷ்மி நடராஜன்.
மேலும் இந்த பிரமாண்ட தயாரிப்பிற்கும் உன்னத முயற்சிக்கும் கல்கி குழுமத்துடன் கைக்கோர்த்து, பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இணைந்து பெருமை சேர்த்த ராம்ராஜ் காட்டன், சக்தி மசாலா மற்றும் சிட்டி யூனியன் பேங்க் மற்றும் முருகப்பா குழுமத்தின் CUMI மற்றும் Murugappa Morgan Thermal Ceramics Ltd. நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த பிரமாண்ட தயாரிப்பிற்கு ஒத்துழைப்பு அளித்து உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அனுபவ பயணம்:
இந்த காணொளிகளை கண்டு களிப்பதோடு மட்டுமில்லாமல் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களுக்கு அனுபவப் பயணம் மேற்கொண்டு மகிழும் வகையில் ஏற்பாடுகளை செய்துத் தர முன்வந்துள்ளனர் Parry Travels நிறுவனத்தார். 4 நாட்கள், 5 நாட்கள், 11 நாட்கள் என பலவிதங்களில் பயண திட்டங்கள் வகுத்துள்ளனர்.
தங்குவதற்கு 3 நட்சத்திர விடுதி, மூன்று வேளை ருசியான உணவு, A/C Tempo Traveller ல் சொகுசான பயணம் என்று அனைத்து வசதிகளுடன் இந்த பயணத்தினை ஏற்பாடு செய்துள்ளனர் Parry Travels நிறுவனத்தார். குழு பயணம், தனிப்பயனாக்கப்பட்ட பயணம் (customized tours) என்ற ஏற்பாடுகளும் செய்துத் தருகின்றனர்.
முதல் பயணம் செப்டெம்பர் 30-ம் தேதி அன்று ஏற்பாடாகியுள்ளது. முதல் அனுபவ பயணத்திற்கு மெருகூட்டும் வகையில் திரு. காலசக்கர நரசிம்மா அவர்களும் உடன் பயணித்து பொன்னியின் செல்வனின் வரலாற்று சிறப்புகளை எடுத்துரைக்க இருக்கிறார்.
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் www.ponniyinselvantours.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்கள் அறிய 73059 15554 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
இந்த முதற் பயணத்தைத் தொடர்ந்து குழுபயணங்களும் தனிநபர் பயணங்களும் ஏற்பாடு செய்து தரப்படும். பயணங்கள் தொடரும்.