புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்னென்ன? விவரங்கள் இதோ…

நரகாசுரனின் கதை

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த உலகம் நிச்சயம் நரகாசுரனையும் மறந்திருக்க முடியாது, அந்த வகையில் விநாயகா நாட்டியாலயா குழுவின் நரகாசுரனின் வாழ்க்கை புராண கதையை நாட்டிய அபிநயங்களுடன் எளிய முறையில் எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ள நிகழ்ச்சி தான் “நரகாசுரனின் கதை” இசை நாடக நாட்டியம் .புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 கொஞ்சம் டாக் கொஞ்சம் ஜோக்

வாராந்திர நிகழ்ச்சியாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோ “கொஞ்சம் டாக் கொஞ்சம் ஜோக்”.இதில் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ரீல் வாழ்க்கையிலிருந்து வெளியேறி, தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தங்கள் நிஜ வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தவகையில் நடிகர் அப்புக்குட்டி விருந்தினராக பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி தினத்தன்று காலை 11:30 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

 முந்தி முந்தி விளையாடு

புதுயுகம் தொலைக்காட்சியில் வாராந்திர நிகழ்சியாக ஒளிபரப்பாகி வருகிறது “முந்தி முந்தி விளையாடு” கேம்ஷோ. திரைப்படத்துறையைச் சேர்ந்த இளம் ஜோடிகளை பங்கு பெறும் இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி தினத்தன்று அன்று காலை 9.00 மணிக்கு, ஒரு சிறப்பு கேம் ஷோ வாக கேள்வி பதில்கள், பாடல், நடனம் மற்றும் கொண்டாட்டங்களுடன் மிகவும் பிரமாண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் சிறப்பு பார்வை

உலகப் புகழ்பெற்ற தமிழ் நாவல் பொன்னியின் செல்வன் இன்றைக்கு தமிழகத்தின் பெரும் பேசு பொருளாக இருக்கிறது.கல்கியின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அவற்றின் அருமை பெருமை அதில் இந்த நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் சோழ பாண்டிய வரலாறு இவற்றை குறித்த ஆச்சரியமான அபூர்வமான ருசிகரமான தகவல்களை  கல்கி குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி நடராஜன் பத்திரிகையாளர் இலக்கியப் பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன் நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா . எழுத்தாளர்கள் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஜெயராம் ரகுநாத் ஆகியோர் இளைய தலைமுறைகளுடன் பங்கேற்ற சுவாரசியமான நிகழ்வு புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று மதியம் 1:00மணிக்கு ஒளிபரப்பாகிறது.

என் புத்தக அறையில்

“என் புத்தக அறையில்”  தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 5:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் ராதாரவி அவர்கள் தனது வாசிப்பு அனுபவங்களை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரது வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் .

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp