ஸ்ரீரங்கம் கோவிலின் சொர்க்க வாசல் திறப்பு… ஜனவரி 2 அதிகாலை புதுயுகம் தொலைக்காட்சியில் நேரலை!

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு 23.12.2022 முதல் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் பகல் பத்து, இராப்பத்து நிகழ்ச்சிகளின் தொகுப்பு தினமும் காலை 11.30-க்கும் இரவு 11 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு சிறப்பு நேரலையாக அதிகாலை 3.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ளது.