சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி… ‘பரிவர்த்தனை’ படத்தில் அணிவகுக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகன் சுர்ஜித் கதாநாயகனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பரிவர்த்தனை.’எம்.எஸ்.வி. புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் இந்த படத்தை, ‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இணை இயக்குனராக வி. இளமாறன் பணியாற்றியுள்ளார்.

படத்தில் விஜய் டி.வி. நட்சத்திரங்கள் மட்டுமல்லாது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரின் வில்லன் பாரதி மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இவர்களோடு இளம் வயது நாயகர்களாக விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன் மற்றும் இளம் வயது நாயகிகளாக சுமேகா, ஹாசினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மணிபாரதியிடம் கேட்டபோது, காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் எதை எதையோ பரிவர்த்தனை செய்கிறோம் அது போல இந்த காதல் பரிவரித்தனையும் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும்.

படம் முழுவதும் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடமான புளியஞ்சோலையில் படமாக்கியிருக்கிறோம்.

இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இந்த படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது’ என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – கே. கோகுல்
இசை – ரஷாந்த் அர்வின்.
நடனம் – தீனா
எடிட்டிங் – பன்னீர் செல்வம்

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp